பருத்தித்துறையில் 9 வயது சிறுமிக்கு கொரோனா!

Date:

வடமாகாணத்தில் இன்று (16) மூன்று பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 9 வயதான சிறுமியும் உள்ளடங்குகிறார்.

யாழ்.போதனா வைத்தியசாலை யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் இன்று 717 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒருவர் பருத்தித்துறையைச் சேர்ந்த 09 வயதுடைய சிறுமி என்றும் அவர் ஏற்கனவே கொரோனா நோயாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

அதேவேளை யாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வீடு திரும்பியுள்ள யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

இந்நிலையில் மன்னாரிலிருந்து கர்ப்பிணிப் பெண் ஒருவர் நோயாளர் காவு வண்டி மூலம் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்