லெஜண்ட் சரவணன் படத்தில் ஊர்வசி ரவுடேலா ஒப்பந்தம்

Date:

லெஜண்ட் சரவணன் நடித்து வரும் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க ஊர்வசி ரவுடேலா ஒப்பந்தமாகியுள்ளார்.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவர் நடித்த விளம்பரங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கி வருகிறார்கள். கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்ட படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் லெஜண்ட் சரவணனுக்கு நாயகியாகப் புதுமுகம் கீர்த்திகா திவாரி நடித்து வருகிறார். அவர் தவிர்த்து மற்றொரு நாயகி கதாபாத்திரம் இருப்பதாகவும், அதற்காக முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். தற்போது அதில் ஊர்வசி ரவுடேலா ஒப்பந்தமாகி நடித்து வருவது உறுதியாகியுள்ளது.

மணலியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில், தற்போது ஊர்வசி ரவுடேலா இருப்பதாக அவருடைய தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

லெஜண்ட் சரவணன், கீர்த்திகா திவாரி, ஊர்வசி ரவுடேலா ஆகியோருடன் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகரும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர்...

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? – போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர்...

பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்