நண்பரை வீட்டுக்கு அழைத்து வந்து அவரை குத்தி கொலை செய்து பூனைகளுக்கு உணவாக அளித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கஜகஸ்தான் நாட்டில் உள்ள கரகண்டா பகுதியை சேர்ந்தவர் அர்மான் (33). தனது பக்கத்து வீட்டுக் காரரும், நண்பருமான டனியர் என்பவரை மது அருந்துவதற்காக வீட்டுக்கு அழைத்துள்ளார். இருவரும் இணைந்து வோட்கா அருந்தியுள்ளனர்.
சில மணி நேரங்களில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் எல்லைமீறியதும் சமையலறையில் இருந்து கத்தியை எடுத்துவந்த அர்மான், டனியரை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல், அடுத்த மூன்று நாட்களில் டனியரின் உடலை துண்டு துண்டாக வெட்டி தெருவில் சுற்றித் திரியும் பூனைகளுக்கு உணவாக கொடுத்துள்ளார்.
டனியர் திடீரென காணாமல் போனதால், உறவினர்கள் பொலிசாரிடம் புகாரளித்தனர். அதன்பின்னர், டனியர் கடைசியாக அர்மானின் வீட்டுக்கு சென்றதை கண்டறிந்த பொலிசார், அர்மான் வீட்டில் சோதனை நடத்தினர்.
அர்மான் வீட்டில் டனியரின் உடல் பாகங்களில் மீதி மட்டும் கிடைத்தது. இதையடுத்து, அர்மான் கைது செய்யப்பட்டு அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.