கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். <
இன்று(09) முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்யும் தீர்மானம் பற்றி செய்திளாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன, கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்வதற்கான அனுமதி மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
எனினும், உரிய ஆய்வின் பின்னரே சுகாதார அமைச்சு இரணைதீவில் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.