உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒரு பகுதி தமக்கு வழங்கப்பட்டுள்ள போதும், இன்னும் பல கேள்விகள் உள்ளன என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் குழுவழன் நிதி ஆதாரங்கள் மற்றும் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி போன்ற விவரங்கள் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றார்.
அரசாங்கம் மேலும் விசாரணைகளை வீரியத்துடன் மேற்கொள்ளும் என்று தேவாலயம் எதிர்பார்க்கிறது என்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரிகளின் பெயர்களை வெளியிடுமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2021 ஏப்ரல் 21 ஆம் திகதிக்குள் வெளிப்படையான விசாரணையின் மூலம் நீதி கிடைக்கவில்லை எனில், அவர்கள் கருப்பு நிற அங்கியை மட்டும் அணிய மாட்டார்கள், வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்த ஆண்டு முழுவதும் கருப்புக் கொடியை ஏற்ற நாடு முழுவதும் உள்ள மக்களை அழைக்கவுள்ளதாக தெரிவித்தார்.
தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகள், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் மற்றும் ஊக்குவித்தவர்கள், தாக்குதல் நடத்தியவர்களுக்கு நிதியளித்தவர்கள் மற்றும் பலவீனப்படுத்தவும் நாசவேலை செய்யவும் தலையிட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வெளியிடுமாறு கோரினார்.