யாழ் நகரில் வீடு புகுந்து ரௌடிகள் அட்டகாசம்: பெற்றோல் குண்டு தாக்குதல்!

Date:

யாழ் நகரில் நள்ளிரவு வேளை இனம்தெரியாத குழுவொன்று வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

யாழ் நகரில், கஸ்தூரியார் வீதியில், உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வாள்கள், கத்திகளுடன் வந்த ரௌடிக் கும்பலொன்று வீட்டின் ஜன்னல்களை அடித்து நொறுக்கி, வீட்டிலிருந்த மோட்டார் வாகனம் உட்பட பல பொருட்களையும் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளது.

வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது.

இதனால் அச்சமடைந்த வீட்டுக்காரர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே வேளை இனந்தெரியாத கும்பலின் தாக்குதல் நடத்திய வீட்டிற்கு யாழ் மாநகர முதல்வர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

டொரொண்டோ பேருந்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு: தமிழ் இளைஞர் கைது

கனடாவின் டொரொண்டோ நகரில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை இன மற்றும்...

போலி வைத்தியர் கைது!

மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் போல் நடித்து, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்