தொடர்பான கோரிக்கையை முன்நிறுத்தி லண்டன் நகரில் அம்பிகையினால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டங்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரியக்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இன்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்முனை மாநகரசபை உறுப்பினர் ச.இராஜன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அம்பாறை மாவட்டத் தலைவி செல்வராணி, நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி, கல்முனை இளைஞர் சேனை அமைப்பின் பிரதிநிதி பிரதீபன் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
கடந்த 03ம் திகதி பொத்துவில் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட இருந்த உணவு தவிர்ப்புப் போராட்டமானது பொலிஸாரால் வழங்கப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் இன்றைய தினம் திட்டமிட்டபடி இடம்மாற்றம் செய்யப்பட்டு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.