புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழுவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இன்று (20) இடம்பெறவுள்ளது.
புதிய அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் குறித்து பிரதான கட்சிகளுடன், நிபுணர் குழு நடத்தி வரும் சந்திப்புக்களின் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு இடம்பெறும்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.
காலை 9.30 மணிக்கு சந்திப்பு இடம்பெறும்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1
1