‘வேறு கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேச வருவது முறையல்ல’: ரெலோவுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தது தமிழரசு கட்சி!

Date:

கூட்டணியொன்றில் நீடித்துக் கொண்டு, மற்றொரு தரப்புடன் டீல் பேச வருவது முறையல்ல என, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேன் குருசாமி ஆகியோருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை இன்று செல்வம், சுரேன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

யாழ்ப்பாணத்திலுள்ள சீ.வீ.கே.சிவஞானத்தின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

வன்னியில் மாந்தை மேற்கு உள்ளிட்ட சபைகளில் தமக்கு ஆட்சியமைக்க ஆதரவு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுப்பதற்காக ரெலோ தரப்பினர் இந்த சந்திப்பை கோரியிருந்தனர்.

ரெலோ தரப்பினர் பலமுறை கோரிக்கை விடுத்தததால், அவர்களை சந்திப்புக்கு அழைத்ததாக இலங்கை தமிழரசு கட்சி வட்டாரங்கள் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தன.

சந்திப்பின் தொடக்கத்திலேயே- ரெலோ தரப்பினர் தற்போது புதியதொரு கூட்டணியில் இணைந்துவிட்டு, மற்றொரு தரப்புடன் டீல் பேச வருவது அரசியல் அறமற்றது என்று தமிழரசு கட்சியினர் அறிவுரை கூறியுள்ளனர்.

ரெலோ தரப்பு விடுத்த வேண்டுகோளை நிராகரித்த தமிழ் அரசு கட்சி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரெலோ- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் எப்படி நடந்து கொள்கிறார்களோ, அப்படியே தாமும் வன்னியில் நடந்து கொள்வோம் என தமிழ் அரசு கட்சியினர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அளவில் இந்த சந்திப்பு நடந்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சி ஆதரவளிக்கா விட்டால், வவுனியா மாநகரசபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்படும். அங்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும். பதிலடியாக, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆதரவளிக்கா விட்டால், இலங்கை தமிழ் அரசு கட்சி வவுனியா, மன்னார், முல்லைத்தீவில் பல சபைகளை இழக்கும். அல்லது தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டையடுத்து, மேற்படி 3 மாவட்டங்களின் தமிழரசு கட்சியின் பிரமுகர்களை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டபோது, யாழ்ப்பாணத்திலிருந்து எடுக்கும் முடிவுகள் தமது பிரதேசத்தை பாதிக்காத விதத்தில் செயற்படுவோம் என்றும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைப்பதை தவிர தமக்கு வேறு தெரிவுகள் இல்லையென்றும் குறிப்பிட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்