பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சம்பியன் பட்டம் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் முதல்நிலை வீரர் ஜானிக் சின்னரை 4-6 6-7(4) 6-4 7-6(3) 7-6(10-2) என்ற கணக்கில் வீழ்த்தி தனது ஐந்தாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஸ்பெயினை சேர்ந்த உலகின் இரண்டாம் நிலை வீரர் கார்லோஸ் அல்கராஸ்.
அல்கராஸ் கடந்த ஆண்டும் பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றிருந்தார். இம்முறையும் பட்டம் வென்றதன் மூலம், ஸ்பெயினின் ரபேல் நடால் மற்றும் பிரேசிலின் குஸ்டாவோ குயர்டனுக்குப் பிறகு, இந்த நூற்றாண்டில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தைத் தக்கவைத்த மூன்றாவது வீரர் ஆனார்.