வாகனம் பிடித்துப் போய் முன்பகை தீர்த்த கும்பல்: யாழில் கொடூர சம்பவம்!

Date:

வரணி பகுதியில் ஆலய திருப்பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் மீது சுமார் 20 பேர் கொண்ட இளைஞர் குழு நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (6) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது.

வரணி மகாவித்தியாலயத்திற்கு அருகில் உள்ள ஆலயத்தில் திருப்பணியில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரரான, கொக்குவிலை சேர்ந்த 26 வயதான இளைஞனே படுகாயமடைந்தார்.

முன்னர் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பான முரண்பாட்டின் எதிரொலியாக, துன்னாலையை சேர்ந்த கும்பலொன்று இந்த ரௌடித்தனத்தில் ஈடுபட்டது.

சிறிய ரக கன்டர் வாகனமொன்றில் சென்ற 20 பேர் கொண்ட கும்பலால் இளைஞன் தாக்கப்பட்டார். தலை, காது, கை, கால்களில் காயமடைந்த அவர், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அவரது பெறுமதியான கைத்தொலைபேசி, தங்கச்சங்கிலி என்பவற்றையும் அந்த கும்பல் திருடிச் சென்றது.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்