யாழ்ப்பாண பொலிசாருக்கு முச்சக்கர வண்டிகள்!

Date:

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பிரதம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் கலந்துகொண்டு பொலீஸ் நிலையங்களுக்கான முச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்.

நாடு பூராகவும்உள்ள பொலீஸ் நிலையங்களுக்கென2000 முச்சக்கர வண்டிகள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கையளிக்கப்பட்ட 40 முச்சக்கர வண்டிகளும் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ் போலீஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் யாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டு தமக்குரிய முச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொண்டார்கள்.

யாழ்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு தலா இரண்டு முச்சக்கர வண்டிகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்