சிறுமியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்; அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

Date:

மலையக சிறுமியின் மரணம் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இவற்றை வலியுறுத்தி நாம் போராடுவோம். அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வீட்டுப் பணிப்பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பான ட்ரொடெக்ட் .அமைப்பின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்தார்.

இன்று (18) அட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த டயகம பகுதி சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பல தகவல்கள் வெளியாகினாலும், சட்டபூர்வமான அறிவிப்பு இன்னும் தெரியவரவில்லை. தரகர் ஒருவர் ஊடாகவே அச்சிறுமி சென்றுள்ளார். சிறாரை எவ்வாறு வேலைக்கு அமர்த்த முடியும்? இதற்கு முன்னரும் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே, சிறுமியின் மரணம் தொடர்பில் எமக்கு உண்மை தெரியவரவேண்டும். எமக்கு நீதி அவசியம். எந்தவொரு தகவலும் மூடிமறைக்கப்படக்கூடாது. அதற்காக வீட்டுப்பணிபெண்களுக்காக குரல் கொடுக்கும் எமது சங்கம் போராடும். வீட்டுப்பணிப்பெண்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

மலையக பகுதியில் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றோம். இதனால் பெண்கள் இன்று கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளது. சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமும் இல்லை. பெண்களை வேலைக்க செல்லவேண்டாம் எனக்கூறவில்லை. ஆனால் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்” என்றார்.

–க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி, நடத்துனர் மீது தாக்குதல்! களுத்துறையில் 6 பேர் கைது!

களுத்துறை–கொழும்பு பிரதான வீதியின் நாகஸ் சந்திப் பகுதியில், சொகுசு பேருந்தொன்றை மோட்டார்...

இந்தியாவை உலுக்கிய அர்னாப் புயல்! 6 பேர் பலி; 15,000 மின்கம்பங்கள் சேதம்!

இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய அர்னாப் புயலால் குறைந்தது ஆறு...

நிந்தவூரில் நாளை முதல் கோழி இறைச்சி விலையைக் காட்சிப்படுத்துவது கட்டாயம்-மீறினால் சட்ட நடவடிக்கை

நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்