பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய சோதனையில் ஏறக்குறைய ரூ .71 மில்லியன் மதிப்புள்ள 237 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஒரு டிங்கி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள், 28 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள். பருத்தித்துறை மற்றும் அச்சுவேலியை சேர்ந்தவர்கள்.
கேரள கஞ்சா மற்றும் டிங்கி ஆகியவற்றுடன் கடத்தல்காரர்களை காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடற்படை மற்றும் கடலோர காவல்படை மேலும் தேடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
கேரள கஞ்சாவை நாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்துடன் சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் வைத்து டிங்கிப் படகிற்கு மாற்றப்பட்டதாக சந்தேகிப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.




