கப்பல் மூழ்கிய பகுதியில் எண்ணெய் கசிவு: வெளிநாட்டு ஊடகம் தகவல்!

Date:

எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய இடத்தின் அருகே எண்ணெய் கசிப்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது.

கப்பல் மூழ்கியுள்ள பகுதியை சுற்றியுள்ள பகுதியில் எண்ணெய் கசிவை செயற்கைக்கோள் படங்கள் காண்பிப்பதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், இராஜாங்க அமைச்சர் நாலக கொடகேவா இதனை மறுத்துள்ளார்.

ஜூன் 2 ஆம் திகதி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கத் தொடங்கியது. கப்பலில் பெருமளவு இரசாயனங்கள் ஏற்றப்பட்டிருந்தன. இந்த கப்பல் விபத்து இலங்கையின் “மிக மோசமான கடல் சுற்றுச்சூழல் பேரழிவு” என்று விவரிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் துகள்கள் உள்ளிட்ட கழிவுகளால் கடற்கரைகள் நிறைந்தன. இறந்த கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருகிறது. ஆமைகள், திமிங்கிலம், டொல்பின்கள், பிற உடலுயிரினங்கள் இறந்து கரையொதுங்கி வருகின்றன.

தற்போது வெளியான செயற்கைக் கோள் படங்கள், சேதமடைந்த கப்பலைச் சுற்றியுள்ள நீரில் ஒரு பெரிய பரப்பில் மென்மையான எண்ணெய் படலம் பரவியிருப்பதை வெளிப்படுத்துகின்றன.

திங்களன்று (07) எடுக்கப்பட்ட படங்கள், மென்மையாய் பல நூறு மீட்டர் நீளத்திற்கு எண்ணெய் படலம் பரவியிருப்பதை காண்பிக்கிறது.

கப்பலின் ஒரு பகுதி கடற்பரப்பில் மூழ்கியிருந்தாலும், கப்பலின் பெரும் பகுதி வெளியே தெரிவதை படங்களில் தெளிவாகக் காணலாம்.

12 நாட்களாக தீப்பிடித்து எரிந்த கப்பலில், தீயை அணைத்த மறுநாளே கப்பல் மூழ்க ஆரம்பித்தது. 23 தொன் நைட்ரிக் அமிலம் மற்றும் பிற இரசாயனங்கள் அடங்கிய கப்பலின் பெரும்பாலான சரக்குகள் தீயில் அழிக்கப்பட்டன. மீதமுள்ள பொருட்கள் சுற்றியுள்ள கடற்கரைகளை அடைந்து உயிரினங்களிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதைத் தடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

“கப்பலின் கருப்பு பெட்டி” என அழைக்கப்படும் கப்பலின் வோயேஜ் டேட்டா ரெக்கோர்டர் (வி.டி.ஆர்) மீட்கப்பட்டது. இது கப்பலின் செயல்பாடு குறித்த தரவைப் பதிவு செய்கிறது.

சிங்கப்பூர் கொடியிடப்பட்ட கப்பலின் கப்டன், தலைமை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இழப்பீடு பெற கப்பல் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் கடற்பகுதி கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டுள்ளது

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் பகுதிக்கு நேராகக் காணப்படும் கரை நிலமட்டம்...

கணவனுக்கு மன்னிப்பு வழங்கிய ரணிலின் முடிவுக்கு எதிராக மனைவி போர்க்கொடி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில், பராமரிப்புத் தொகையாக 1.74 மில்லியன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்