நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது!

Date:

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகியுள்ளது.

அவள் என்ற ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நெற்றிக்கண் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் என்பவர் இசையமைத்துள்ளார். இது நயன்தாராவின் 65-வது படமாகும்.

இந்தப் படத்தின் நயன்தாரா கண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘ப்ளைண்ட்’ என்னும் கொரியப் படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் தான் நெற்றிக்கண்.

தற்போது நெற்றிக்கண் படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் ஜூன் 9 காலை 9 மணிக்கு வெளியாக இருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நயன்தாரா ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

தியேட்டரில் இப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் முடங்கியுள்ளதால் படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்