வல்வெட்டித்துறை மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தின் கீழ் புதையலாம்: தோண்டிய இருவர் கைது; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

Date:

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரிக்காடு பொது மயானத்தில் சடலமொன்று அடக்கப்பட் செய்யப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 9.30மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர், அங்கு ரோர்ச் வெளிச்சத்தை அவதானித்து, அங்கு சென்ற போது  இருவரும் சிக்கினர்.

இராணுவத்தினர் உடனடியாக பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆதிகோவிலடியை சேர்ந்த 48, 55 வயதான இருவரே கைதாகினர்.

சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு கீழே நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அதை எடுத்து தந்தால் பணம் தருவதாகவும் தமக்கு ஒருவர் கூறியதாகவும், புதையல் தோண்டிய போதிலும் எதுவும் சிக்கவில்லை, நாங்கள்தான் சிக்கியுள்ளோம் என அவர்கள் வாக்குமூலம் வழங்கினர்.

அவர்கள் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

‘எனது கணவர்… மன்னிக்கவும், எனது ஜனாதிபதி’: இணையத்தில் கிண்டலடிக்கப்படும் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர்!

கரோலின் லெவிட் (Karoline Leavitt) என்பவருக்குப் பதிலாக வெள்ளை மாளிகையின் புதிய...

கொளத்தூரில் ஸ்டாலின் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்: திருமாவளவன் பேச்சு!

“கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என ஸ்டாலினிடம் முன்பே சொன்னேன்....

சிஜேபியின் ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நாளை (அக்.16) நடத்த உள்ள மூவர்ணக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்