கிளிநொச்சியில் மேலும் 2 கொரோனா மரணங்கள்!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான இருவர் உயிரிழந்துள்ளனர்.

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் என இருவரே உயிரிழந்துள்ளனர்.

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உயிரிழந்த பெண் கண்ணகிபுரம், புன்னை நீராவி என்ற முகவரியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என்றும் அவருடைய அயல் வீட்டில் வசிக்கும் ஒருவர் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதாகவும் சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டவர் டி5, பெரிய பரந்தன் என்ற முகவரியைச் சேர்ந்த 46 வயதுடைய க.சிறீகாந்தன் என்றும் தெரியவந்துள்ளது.

இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மூச்சுத்திணறலுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். அவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதிானது.

இரண்டு சடலங்களும் தகனம் செய்யப்படுவதற்காக வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்