அங்கர் தயாரிப்பிலும் சீனம்: தமிழ் நீக்கம்!

Date:

அங்கர் வெண்ணெய் பொதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. அந்த பொதியில் சிங்கள மற்றும் சீன (மாண்டரின்) மொழிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஃபோன்டெர்ரா பிராண்ட்ஸ் லங்கா நிறுவனத்தின் தயாரிப்பே அங்கர் வெண்ணெய் பொதியாகும்.

இந்த விவகாரம் குறித்து கொழும்பு ஆங்கில ஊடகமொன்று கேள்வியெழுப்பிய போது, “இலங்கையின்  விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்குகிறோம். பொதியில் பயன்படுத்தப்படும் மொழிகள் குறித்த சமீபத்திய கவலைகளை நாங்கள் புரிந்துகொண்டு உணர்கிறோம்” என்று ஃபோன்டெரா பிராண்ட்ஸ் லங்கா கூறியுள்ளது.

அங்கர் வெண்ணெய் என்பது பல நாடுகளில் சந்தைப்படுத்தும் தயாரிப்பு ஆகும், இது நியூசிலாந்திலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று ஃபோன்டெரா பிராண்ட்ஸ் லங்கா குறிப்பிட்டுள்ளது.

“அதே பொதி இலங்கைக்கும் கிடைக்கிறது. எனவே, தயாரிப்பு பொதியில் இந்த நாடுகளில் பொதுவாக பேசப்படும் மொழியை உள்ளடக்கியுள்ளோம். நாங்கள் பன்முகத்தன்மையை மதிக்கிறோம், எங்கள் வாடிக்கையாளர் தேவைகளை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக வைக்கிறோம், ”என்று ஃபோன்டெரா பிராண்ட்ஸ் லங்கா கூறியுள்ளது.

அங்கர் வெண்ணெய் தயாரிப்பில் காட்டப்பட்டுள்ள லேபிள் குறித்து இதுவரை எந்த முறைப்பாடும் தமக்கு அளிக்கப்படவில்லை என்று இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சாந்த திசானநாயக்க, “தயாரிப்பை வாங்கிய நுகர்வோர் புகார் அளித்தவுடன், இது குறித்து உடனடியாக விசாரணை தொடங்கப்படும்“ என்றார்.

அண்மைக்காலமாக இலங்கையில் பெயர்ப்பலகைகளில் சிங்களத்துடன், சீன மொழியே இடம்பெறுவதும், தமிழ் புறக்கணிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியாவில் புகையிரத விபத்தில் பெண் பலி

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்...

தமிழகத்தில் 84.29% வாக்குப் பதிவு – புதிய வரலாறு படைத்த சட்டப்பேரவைத் தேர்தல்!

அமைதியான முறையில் நடந்த 2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6...

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை உறுதி செய்த சர்வதேச நீதிமன்றம்

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே, தனது "போதைப்பொருள் மீதான போர்"...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்