தற்காப்பு கலை கற்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை : பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு!

Date:

தற்காப்பு கலை பயிற்சிக்கு வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தாக வந்த புகாரை அடுத்து பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவர் புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அதில் கடந்த 2014ஆம் ஆண்டு சென்னையில் கெபிராஜ் என்பவர் நடத்தி வந்த தற்காப்பு பயிற்சியகத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்ததாக கூறியுள்ளார்.

மேலும் ஜூடோ போட்டிக்காக நாமக்கல் சென்று திரும்பும் போது பயிற்சியாளர் கெபிராஜ் காரில் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாகவும், ஒத்துழைப்பு தராததால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் கெபிராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...

சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தை நோக்கி பயணிக்கும் லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலய மாணவி இமானிக்கு கௌரவம்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலயத்திலிருந்து சமூக...

ரூ.09 மில்லியன் செலவில் காரைதீவு திருமால்முக வீதி புனரமைப்பு : தவிசாளர் சு. பாஸ்கரன் நேரில் கள ஆய்வு

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு-07 திருமால்முக வீதியின் புனரமைப்புப் பணிகளை காரைதீவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்