ஆலய குருக்கள்மாருக்கு கொரோனா: திருவிழா நிறுத்தப்பட்டு யாழின் முக்கிய ஆலயம் மூடப்பட்டது!

Date:

சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் கொடியேற்ற திருவிழாவை நடத்திய மற்றொரு குருக்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, திருவிழா நிறுத்தப்பட்டு, ஆலயம் மூடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிற்குள்ளான குருக்களே, ஆலயத்தில் பக்தர்களிற்கு திருநீறு பூசி விடுவதால், சுதுமலையை மையமாக வைத்து கொரோனா பரவல் ஏற்படலாமென்ற அச்சம் உருவாகியுள்ளது.

சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த உற்சவகம் கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

ஆலயத்தில் கொடியேற்றிய குருக்கள், கொடியேற்றத்திற்கு முன்னதாக நயினாதீவு சென்றார், அங்கு கொரோனா தொற்றிற்குள்ளானவருடன் தொடர்பிலிருந்தார் என்ற தகவலையடுத்து, ஆலயத்தின் 3ஆம் திருவிழாவுடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

அவருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் திருவிழாவில் கலந்து கொண்டார்.

இரண்டு நாட்களின் பின் மீண்டும் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியாகியிருந்தது.

இதையடுத்து, 9ஆம் திருவிழாவுடன் திருவிழா இடைநிறுத்தப்பட்டு, ஆலயம் மூடப்பட்டது. ஆலய தர்மகர்த்தா சபையினர் உள்ளிட்ட ஆலயத்துடன் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்