மன்னாரிலும் அஞ்சலி!

Date:

முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (18) அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மத தலைவர்கள்,மன்னார் நகர முதல்வர் , பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மாலை அணிவித்து சுடரேற்றி , மலர் துர்வி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து உப்புக்கஞ்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்