நாளை அதிகாலை முதல் பயணக்கட்டுப்பாடு நீங்குகிறது: நாளை முதல் புதிய விதிமுறை!

Date:

நாடு முழுவதும் நடைமுறை படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுகிறது.

எனினும், இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான நேரத்தில் பயணக் கட்டுப்பாடு நீடிக்கும். மகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடும் நீடிக்கும். இந்த நடைமுறைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும்..

நாளை முதல் தேசிய அடையயாள அட்டையை அடிப்படையாகக்கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதி உண்டு.

தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கமானது ஒற்றை எண் (1,3,5,7,9) என்றால், ஒற்றை இலக்க திகதியில் வீட்டை விட்டு வெளியேற முடியும்.

தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கமானது இரட்டை எண்ணாக (0,2,4,6,8) இருந்தால், இரட்டை எண் திகதிகளில் வீடுகளை விட்டு வெளியேறலாம்.

உதாரணமாக, நாளை (17) ஒற்றை எண் இலக்க திகதி என்பதால், தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கம் ஒற்றை எண்ணைக் கொண்டவர்கள் மட்டுமே  வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

எனினும், உத்தியோகபூர்வ பணிகளில் ஈடுபடுபவர்களிற்கு இந்த நடைமுறை பொருந்தாது.

spot_imgspot_img

More like this
Related

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...

காணாமல் போன மருத்துவரின் உடல் மீட்பு

காணாமல் போயிருந்த பதுளை போதனா மருத்துவமனையின் மயக்கவியல் நிபுணர் மருத்துவர் பிரபாத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்