யாழில் 36 தொற்றாளர்கள்: வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Date:

வடமாகாணத்தில் இன்று 37 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று (10) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 778 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டது.

இதில், யாழ் மாவட்டத்தில் 36 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 4 பேர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 2 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 பேர் (இவர்களில் பண்டத்தரிப்பு கிராமிய சித்த வைத்திய நிலைய வைத்தியர், தாதியர், பணியாளர் என மூவர்), கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் (ஒருவர் நெல்லியடி சுபாஸ் பேக்கரி பணியாளர். எழுமாற்றான சோதனையில் தொற்று உறுதியானது. மற்றையவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பியவர்), யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேர் (ஏற்கனவே தொற்றிற்குள்ளானவர்களுடன் முதல்நிலை தொடர்பிலிருந்த 18 பேர், எழுமாற்றான சோதனையில் 4 பேர்), பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்