கங்கை ஆற்றில் மிதப்பது கொரோனா நோயாளிகளின் சடலங்களா?: மாநில அரசுகள் மோதல்!

Date:

பிஹார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் கங்கை நதியில் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதால் அங்கு நோய் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

பிஹார் உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநில எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள நகரம் சவுஸா. இது பிஹாரில் இருந்தாலும் உ.பி. எல்லையையும் ஒட்டி இருக்கிறது. இந்த நகரத்தின் வழியாகக் கங்கை நதி பாய்ந்து செல்கிறது.

இந்தப் பகுதியில் இன்று காலை 40க்கும் மேற்பட்ட சடலங்கள் தண்ணீரில் மிதந்தன. இதனைப் பார்த்த கிராமவாசிகள் கலக்கமடைந்தனர்.

இது குறித்து சவுசா மாவட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, காலையில் சவுசாவின் மகாதேவ் காட் பகுதியில் 40 முதல் 45 சடலங்கள் மிதந்தன. 100 சடலங்கள் கூட இருக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர். சடலங்கள் எல்லாம் உப்பியுள்ளன. இவை எங்கிருந்து வந்தன என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது.

உ.பி.,யின் பராயிச், வாரணாசி அல்லது அலகாபாத்தில் இருந்தே வந்திருக்க வேண்டும். ஏனெனில் பிஹாரின் இப்பகுதியில் சடலங்களை நதியில் வீசும் பழக்கமில்லை. மேலும், அவை கொரோனாவால் உயிரிழந்தோர் சடலமா என்ற சந்தேகமும் உள்ளது. அதனால், கிராமவாசிகள் கொரோனா அச்சத்தில் உள்ளனர் என்றார்.

ஆனால், சடலங்கள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தது அல்ல என்று உபி அரசும் அடித்துச் சொல்லி வருகிறது. ஆனால், உ.பி காங்கிரஸ் கட்சியினரோ கொரோனா மரணங்களை மறைப்பதற்காக மாநில அரசுக்குத் தெரிந்தே சடலங்கள் ஆற்றில் வீசப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...

மட்டக்களப்பில் மீனவர் நலன் கருதி அபிவிருத்தி குழு கூட்டத்தில் எம்.பி மார் பேசுவதில்லை என ஈ.பி.டி.பி.கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்...

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர் எடுக்க வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்