ஆயுர்வேத சிகிச்சையெனும் போர்வையில் சட்டவிரோதமாக மேலைத்தேய மருத்துவ சிகிச்சை வழங்கிய மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு!

Date:

பருத்தித்துறை நகர்ப் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை என்ற போர்வையில் மேலைத்தேய சிகிச்சையை சட்டவிரோதமாக மேற்கொண்டுவந்த சிகிச்சை நிலையம் மாவட்ட உணவு மருந்து பரிசோதகர், பொதுசுகாதார பரிசோதகர்கள், பருத்தித்துறை பொலிஸார் சகிதம் சுற்றிவளைக்கப்பட்டது.

அங்கு மேற்கொண்ட பரிசோதனைளில் நிலையம் அடிப்படை சுகாதார வசதிகள் இன்றியும் மேலைத்தேய மருத்துவ சான்றுபெற்ற வைத்தியர் எவரும் இல்லாத நிலையில் ஆயுர்வத மருத்தவர் ஒருவரின் மனைவியால் சிகிச்சையளிக்கப்பட்டுக் கொண்டிருந்தமை தெரியவந்தது.

அங்கு அன்டிபயோட்டிக் வகை மருந்துகள் பலவும் தொற்றாநோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மேலைத்தேய மருந்துகளும் சிகிச்சை செய்ய பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

இதன்போது அங்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தவர் பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்க மறுத்து தலைமறைவானதோடு மேலும் சட்டவிரோதமாக மருந்துகளை களஞ்சியப்படுத்தியிருக்கலாமென சந்தேகிக்கும் அவர்களது வீட்டை பரிசோதிக்க விடாது இடையூறும் விளைவித்தனர்.

எனவே கடமைகளுக்கு இடையூறு விழைவித்தமை, பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தமை, மேலைத்தேய மருத்துவ தகுதிச் சான்றில்லாது மருந்துகளை வைத்திருந்தமை, சிகிச்சைக்கு பயன்படுத்தியமை, மேலைத்தேய தகுதிவாய்ந்த மருத்துவரின்றி மேலைத்தேய மருத்துவ சிகிச்சை வழங்கியமை மற்றும் தூய்மையற்ற நிலையில் நிலையத்தை விலங்குகளுடன் பேணியமை உட்பட பல குற்றச்சாட்டுகளுடன் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்செய்ய சுகாதாரப்பகுதியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த மருத்துவ நிலையம் கடந்தவாரம் பொது சுகாதார பரிசாதகர்களால் கோவிட் கட்டுப்பாட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தியபோதும் இந்தநிலை காணப்பட்டு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்தவேளையில் தற்போதயை விட ஏராளமான அன்டிபயோட்டிக் மருந்துகள் இருந்தமை அடையாளப் படுத்தப்பட்டிருந்தது.

மேலும் இந்த வைத்திய நிலையம் சில வருடங்களுக்கு முன்பும் இதே குற்றச் சாட்டுகளுக்காக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றால் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு மன்றினால் கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகுதியற்ற இவ்வாறான சிகிச்சைகளால் பொதுமக்கள் குறுகிய மற்றும் நீண்டகால பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தாம் செல்லும் வைத்திய முறையெது அதற்கு தகுதியான வைத்தியரா சிகிச்சையளிக்கிறார் என்பது பற்றி மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும் என் சுாதார பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்