இலங்கையிலும் நுழைந்தது இந்திய வைரஸ்; யாழில் பரவுகிறது ஐரோப்பிய திரிவு; மன்னாரில் கென்ட் பிராந்திய வைரஸ்!

Date:

இந்தியாவில் பரவும் உருத்திரிபடைந்த  பி .1.617 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வைரஸின் மாதிரியை ஆராய்ந்ததில் இந்தியாவில் பரவி வரும் வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் கண்டுள்ளதாக சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

மேலும், தென்னாபிரிக்காவில் பரவும் திரிபடைந்த பி .1.351 வைரஸ் பாதிக்கப்பட்ட நபரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளில் பெறப்பட்ட வைரஸின் மரபணு சோதனையில் டென்மார்க் / ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பரவி வரும் பி .1.428 வைரஸே பரவி வருவது அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறிப்பாக நல்லூர் பகுதியில் பதிவாகியுள்ளது.

அத்துடன், பிரிட்டனின் கென்ட் பிராந்தியத்தில் கண்டறிப்பட்ட B.1.1.7  திரிபடைந்த வைஸினால் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகள்:

கொழும்பு மாவட்டம்: கொழும்பு நகரசபை பகுதி, ஹோமாகம, போரலஸ்கமுவ பகுதிகளில் காணப்படுகிறது.

குருநேகலா மாவட்டத்தில் பொல்பிதிகம, குளியாபிட்டி, நிகவெரட்டிய,  கணேவத்த, அம்பன்பொல, கிரியுல்ல, பன்னல மற்றும் வாரியபொல.

களுத்துறை மாவட்டம்: அகலவத்தை, பிம்புர, பாணந்துறை மற்றும் பண்டாரகம.

கண்டி மாவட்டம்: பாண்டுவஸ்னுவர, கண்டி மற்றும் ஹிங்குரகொட.

பொலன்னருவ – மெதிரிகிரிய

மன்னார் மாவட்டம்- மன்னார் நகரசபை எல்லை.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்