நாச்சிமார் கோயில் நிர்வாகம் கைது; நயினாதீவில் வெசாக்கா?: பாராளுமன்றில் கஜேந்திரகுமார் கேள்வி!

Date:

தேசிய வெசாக் பண்டிகையை நயினாதீவில் நடாத்துவதனை நிறுத்த வேண்டும் என கஜேந்திரகுமார் எம்பி பாராளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் உரையாற்றுகையில்,

நாங்கள் கோவிட் பெருந்தொற்றுப் பற்றிப் பேசுகிறோம். சுகாதார அமைச்சர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இப்பாரதூரமான விடயங்கள் முடிவிற்கு கொண்டுவர வேண்டும். அரசாங்கம் தங்களால் முடிந்ததனைச் செய்வதாகக் கூறிவருகிறது.

யாழ்ப்பாணத்தில் சமய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறபோது அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கிறது. இவ்வகையில் நாச்சிமார் கோவில் தலைவரையும் செயலாளரையும் கைது செய்திருக்கிறது.

இதுதான் நிலமையெனின் நயினாதீவில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய வெசாக் பண்டிகை கொண்டாட்டங்கள் அங்கு நடைபெற முடியாது. நாட்டிலுள்ள பாரதூரமான நிலமைகளை கவனத்திற் கொண்டு இவற்றை நிறுத்துமாறு கோருகிறேன்.

நயினாதீவில் வெசாக் பண்டிகை கொண்டாட்டத்தை நடத்துவதாக அறிவிக்ப்பட்டபோது அதனை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபிக்கவில்லை.
ஆனால் இப்போதுள்ள பாரதூரமான நிலமையை கவனத்திற்கொண்டு அதனை நிறுத்துமாறு கோருகிறேன். அவ்வாறு செய்யாதவிடத்து தேவையற்ற வகையில் இனமுரண்பாடுகள் ஏற்படுவதனை தவிர்க்க முடியும். இவ்விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் நடந்துகொள்ளும் என நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

கொலையாளியின் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது!

பாதாள உலகத் தலைவன் 'லொகு பட்டி' என்பவனுக்காக கூலிப்படையினராகச் செயல்பட்டதாகக் கூறப்படும்...

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹூதிகள்

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள், யேமனின் இடைக்காலத் தலைநகரான ஏடனில் உள்ள...

ட்ரம்ப்- ஜெலென்ஸ்கி மோதல் முற்றுகிறது!

அமெரிக்க-ரஷ்ய டீசல் ஒப்பந்தம் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்