குரு பகவானின் தோஷம் நீங்கி நல்லருள் பெற்றிட செய்ய வேண்டியவை!

Date:

வேத ஜோதிடத்தின் படி தேவர்களின் குருவாக விளங்கும் குரு பகவான் முழு சுபகிரகம் ஆவார்.குரு பகவான் ஒருவருக்கு வெற்றி, நல்ல அதிர்ஷ்டம், தொழில், அதிர்ஷ்டம், சாதனை மற்றும் செழிப்புக்கான ஒரு காரணியாகக் கருதப்படுகிறது. ஒரு ராசியில் கிட்டத்தட்ட 1 ஆண்டு காலம் சஞ்சரிக்கக்கூடிய குரு 2021 ஏப்ரல் 5 தேதி முதல் செப்டம்பர் 13ம் தேதி வரை கும்ப ராசியில் அதிசார பெயர்ச்சியில் இருப்பார்.ஒருவருக்கு குரு குறைபாட்டுடன் இருந்தால் அந்த நபருக்கு பல வகையில் பிரச்னைகளும், நிதி சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும். குரு ஒருவருக்கு சிறப்பான பலனைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

குரு பகவான் ஒருவருக்கு வெற்றி, நல்ல அதிர்ஷ்டம், தொழில், அதிர்ஷ்டம், சாதனை மற்றும் செழிப்புக்கான ஒரு காரணியாகக் கருதப்படுகிறது. ஒரு ராசியில் கிட்டத்தட்ட 1 ஆண்டு காலம் சஞ்சரிக்கக்கூடிய குரு 2021 ஏப்ரல் 5 தேதி முதல் செப்டம்பர் 13ம் தேதி வரை கும்ப ராசியில் அதிசார பெயர்ச்சியில் இருப்பார்.

ஒருவருக்கு குரு குறைபாட்டுடன் இருந்தால் அந்த நபருக்கு பல வகையில் பிரச்னைகளும், நிதி சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும். குரு ஒருவருக்கு சிறப்பான பலனைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
​அதிர்ஷ்டம் கிடைக்க குங்கும் பூ

குரு பகவானால் ஏற்படக்கூடிய தீங்கு நிலை அகல குங்கும் பூ சிறந்ததாக கருதப்படுகிறது. குரு சாதகமான நிலை அடைய மோதிர விரலால் குங்கும திலகத்தை தினமும் அணிந்து கொள்வது அவசியம். இப்படி செய்வதன் மூலம் குருவின் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெற்றிடலாம்.

​மஞ்சள் தரும் மங்களம் :

குரு பகவானின் மங்களகரமான பலனைப் பெற மஞ்சள் மிகவும் உதவுகிறது. அதைப் பெற எளிய வழி இதோ. நாம் குளிக்கும் போது அந்த நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் குளிக்கவும்.

நாம் குளிக்கும் போது குருவின் மந்திரமான, ‘ஓம் குருவே நமஹ:’ என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். குருவின் அருள் இருந்தால் அவரின் தொழில், உத்தியோகத்தில் நல்ல வெற்றியும், லாபமும் பெற்றிடலாம்.

​ஜாதகத்தில் குருவின் அருள் அதிகரிக்க :

குரு பகவானின் அருளைப் பெற்றிட வியாழக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து பூஜை அறையில் தீபமேற்றி விஷ்ணு – மகாலட்சுமி தேவியை வணங்க வேண்டும்.

அதோடு விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது சந்தான லட்சுமி ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு விஷ்ணு பகவானின் அருளைப் பெற்றிடலாம். அதுமட்டுமல்லாமல் வியாழக்கிழமைகளில் யாருடனும் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களை செய்யாதீர்கள்.

ஜாதகத்தில் கிரக நிலைகள் சிறப்பாக இருந்தும் நினைத்தது நடக்க வில்லையா? இதை கட்டாயம் செய்யுங்கள்

​குரு அருளால் செல்வத்தைப் பெற்றிட

குரு பகவானின் சுப பலனை அடைய வாழை மர வேர் சுபமானதாக பார்க்கப்படுகிறது. உத்தியோகம், தொழில், திருமணம் தொடர்பான விஷயங்களில் சிக்கல் எதிர்கொண்டால், அவர்கள் வாழை மர வேர் அணிந்து கொள்ளலாம். ஆண்கள் இடது கையிலும், பெண்கள் வலது கையிலும் அணியலாம். இதனால் உங்களுக்கு குருவால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி நன்மையும், செல்வ நிலை உயரும்.

​குருவுக்கு உகந்த கனக புஷ்பராகம்

ஜோதிடத்தின் படி ஜாதகத்தில் குருவின் அருள் மேலோங்க கனக புஷ்பராகம் ஐம்பொன்னில் வைத்து மோதிரமாக அணிவது நல்லது. இதனால் மரியாதை, குடும்பத்தின் செல்வத்தில் வளர்ச்சி, மகிழ்ச்சி மற்றும் அமைதியை பெற்றிடலாம். மேலும், இது வணிகத்தில் இருக்கும் சிக்கல்களிலிருந்து மீள உதவுகிறது.

குரு தோஷம் நீங்க

ஜாதகத்தில் குருவின் நிலை மேம்படவும், குரு தோஷம் நீங்க செய்ய வேண்டியது வீட்டில் உள்ள பெற்றோர், வயதில் பெரியோரை மதித்து செயல்படுவதும், அவர்களின் ஆசி பெறுவதும் அவசியம்.

நவகிரகங்கள் ஏற்படுத்தும் நோய்களும் எளிய பரிகாரங்களும்

குருவின் அருள் பெற்றிடவும், குரு தோஷம் நீங்கிட ஏழை மக்கள், ஆதரவற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகள், நல்லனவற்றைச் செய்திடலாம். ஏழை மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயத்தில் உதவிடலாம்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...

யாழ் விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்