யாழில் கைதான யூரியூப் குழுவினர் 4ஆம் மாடியில்!

Date:

யாழ்ப்பாணத்தில் நேற்று (29) கைது செய்யப்பட்ட தமிழ் கொடி யூரியுப் குழுவினர் இருவரும் மேலதிக விசாரணைக்காக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

35 வயதான பெண்ணும், 36 வயதான ஆணுமே நேற்று கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் விதமாக செயற்பட்டதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

வெளிநாட்டு பண பரிவர்த்தனை விவகாரத்திலும் அவர்கள் தீவிர விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.

நாவலர் வீதியிலுள்ள அலுவலகத்தை நேற்று விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டனர். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அங்கிருந்தவர்களை விசாரணைக்குட்படுத்தி, ஆவணங்களை சோதனையிட்ட பின்னர் இருவரையும் கைது செய்தனர்.

அங்கிருந்த 5 மடிக்கணினி, 5 கணினி என்பவற்றையும் மேலதிக விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஸ்மார்போர்ட் வழங்கி வைப்பு

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும்...

நிந்தவூர் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்ரியாஸுக்கு தேசிய மட்டத்தில் 3 கௌரவங்கள்

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்   வை....

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்