மட்டக்களப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள 26 பேருக்கு தடை!

Date:

மட்டக்களப்பில் நாளை (19) முன்னெடுக்க திட்டமிட்டிருந்த போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாதென 26 பேருக்கு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அன்னை பூபதியின் 33ஆம் ஆண்டு நினைவை ஒட்டியும், இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு எத்தனித்துள்ளமை புலனாய்வு மூலம் அறிந்துள்ளதாகவும் இதனால் இலங்கை அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படும் என்பதாலும், நாட்டில் தற்போது பரவும் கொரோனா நோய் வேகமாக பரவும் என்பதாலும் இவ்வாறான எந்த ஆர்ப்பாட்டங்களையும் செய்வது சட்டத்திற்கு முரணானது என குறிப்பிட்டு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

26 பேரின் பெயர் குறிப்பிட்டு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனர்கள், அம்பாறை மாவட்ட எம்.பி த.கலையரசன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் தடையுத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவை மட்டக்களப்பு முன்னாள் எம்.பி பா.அரியநேத்திரனின் இல்லத்திற்கு சென்ற பொலிசார் வழங்கினர்.

spot_imgspot_img

More like this
Related

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...

54 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு- பொலிஸார் விசாரணை

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்