காரைநகர் இ.போ.ச சாலை பேருந்துகள் இன்று (9) சேவையில் ஈடுபடவில்லை.
சாரதிகள், நடத்துனர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இன்று சாலை நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளது.
காரைநகர் சாலைக்கு சொந்தமான எந்த பேருந்தும் இன்று சேவையில் ஈடுபடவில்லை. பேருந்துகள் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன.
இதேவேளை, தனியார் பேருந்துகள் வழக்கம் போல சேவையில் ஈடுபடுகின்றன.




