அக்ஷய்குமார், நிவேதா தாமஸ், கவுரிகிஷனுக்கு கொரோனா

Date:

நடிகைகள் நிவேதா தாமஸ், கவுரிகிஷன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நிவேதா தாமஸ் தமிழில் விஜய்யுடன் குருவி, ஜில்லா படங்களில் நடித்துள்ளார். தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் வந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

நிவேதா தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்காக தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவ விதிமுறைகளையும் கடைபிடிக்கிறேன். விரைவில் குணமடைந்து திரும்புவேன். எனக்கு ஆதரவும் அன்பும் காட்டியவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினருக்கும் நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் முக கவசம் அணியுங்கள்” என்று கூறியுள்ளார்.

கவுரி கிஷன் விஜய்சேதுபதியின் 96 படத்தில் நடித்து பிரபலமானார். விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். கவுரி கிஷன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து தேறி வருகிறேன் என்று கூறியுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். கடந்த 2 வாரங்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

இதுபோல் பிரபல இந்தி நடிகரும் தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்‌ஷய்குமாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. உடனடியாக என்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்“ என்று கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான...

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்