கொரோனாவினால் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் வைத்தியசாலைக்கு தீ வைத்தனர்!

Date:

மராட்டியத்தில் மருத்துவமனையில் உயிரிழந்த கொரோனா நோயாளியான பெண்ணின் உறவினர்கள், மருத்துவமனையின் வரவேற்பு பகுதியை தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

மராட்டியத்தின் நாக்பூர் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 29 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டு உள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.

இதனால், அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் முதலில் வைத்தியரிடம் இதுபற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் உறவினர்கள் சூழ அந்த மருத்துவமனையின் வரவேற்பு பகுதியை தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

இதுபற்றி துணை ஆணையாளர் லோகித் கூறும்பொழுது, பெண்ணின் கணவரது உறவினர்களில் ஒருவர் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். இதன்பின் ரிசப்சனில் இருந்த மேஜை மீது தீ வைத்துள்ளார்.

உடனடியாக, மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் தீயை அணைத்தனர். சி.சி.டி.வி.யில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேரில் 10 பேரை கைது செய்து உள்ளோம் என கூறியுள்ளார்.

அந்த மருத்துவமனையின் அலட்சிய போக்கே பெண்ணின் உயிரிழப்புக்கு காரணம் என அவரது உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். அதன்பின் பெண்ணின் உடலை தராமல் ரூ.1.5 லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர் என்றும் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். இதில், ஏற்பட்ட ஆத்திரத்திலேயே தீ வைப்பு சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஸ்மார்போர்ட் வழங்கி வைப்பு

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும்...

நிந்தவூர் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்ரியாஸுக்கு தேசிய மட்டத்தில் 3 கௌரவங்கள்

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்   வை....

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்