அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளரையும், மனைவியையும் கட்டி வைத்து கொள்ளை!

Date:

பிரபலமான அடிடாஸ் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரையும் அவரது மனைவியை வீட்டில் கட்டி போட்டு, அடித்து, உதைத்து வீட்டிலிருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர் திருடர்கள்.

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அமைச்சராக இருந்தவர் பெர்னார்ட் தபை. இவரது மனைவி டாமினிக் தபை. அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளரான பெர்னார்ட், பாரீஸ் அருகேயுள்ள காம்ஸ் லா வில்லே பகுதியில் அமைந்த தனது வீட்டில் மனைவியுடன் படுத்து உறங்கியுள்ளார்.

அவரது வீட்டிற்குள் நேற்று அதிகாலை 4 திருடர்கள் புகுந்துள்ளனர். அவர்கள் பெர்னார்ட் மற்றும் அவரது மனைவியை அடித்து, உதைத்து, இருவரையும் கயிற்றால் கட்டி போட்டுள்ளனர்.

அதன்பின் வீட்டில் இருந்த பொருட்களை அள்ளி கொண்டு சென்று விட்டனர். டாமினிக் கயிற்றில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு அண்டை வீட்டுக்கு சென்று அங்கிருந்து பொலிசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

இலேசாக காயமடைந்து இருந்த டாமினிக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படார். ஆனால், பெர்னார்ட் மருத்துவ உதவி எதுவும் வேண்டாம் என கூறி மறுத்து விட்டார். கொள்ளையர்கள் எவற்றை எல்லாம் திருடி சென்றனர் என உடனடி தகவல் இல்லை.

பெர்னார்ட் தனது தொடக்க காலத்தில் வீழ்ச்சி கண்ட நிறுவனங்களை வாங்கியுள்ளார். அவர் தனது பங்குகளை அடிடாஸ் விளையாட்டு பொருட்கள் நிறுவனத்திற்கு விற்ற வகையில் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார் என்று அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பொலிசார், கொள்ளை சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

‘டிமிக்கி’ விட்ட மற்றொரு செவ்வந்தி: பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிசார்!

மேல் மாகாண (வடக்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை...

திடீர் வருத்தம் வந்து வெளிநாடு ஓடிய ஷிரந்தி முன் பிணை கோருகிறார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டிலிருந்து இலங்கை...

‘ஜெயிலர் 2’ ட்ரெய்லர் எப்படி? – முத்துவேல் பாண்டியனின் அதகளம்

ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்