லெபனான் வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டிருந்த தனது பணத்தை மீளளிக்கக் கோரி, அந்த நாட்டு பிரஜையொருவர் வங்கிக்குள் 6 பேரை பணயக்கைதியாக பிடித்த சம்பவம் இடம்பெற்றது.
அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஒரு பகுதி பணம் வழங்கப்பட்டதையடுத்து, பயணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு முன்னரே பொருளாதாரத்தில் லெபனான் வங்குரோத்தாக விட்டது. இலங்கையை போலவே ஆட்சியார்களின் ஊழல், தவறான நிர்வாகத்தால் நாடு நெருக்கடியை சந்தித்தது. இதனுடன், கொரோனா பெருந்தொற்றும் இணைய, அந்த நாட்டு பொருளாதாரம் முற்றாக சீர்குலைந்து விட்டது.
இதன் காரணமாக வங்கி கணக்குகளில் இருந்து பொதுமக்கள் பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே பணம் மீளளிக்கப்பட்டு வருகிறது. இது மக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.
மருத்துவமனை பராமரிப்பு உள்ளிட்ட மனிதாபிமான காரணங்களுக்கு விதிவிலக்கு அளிக்கிறோம் என்று வங்கிகள் கூறுகின்றன, ஆனால் விதிவிலக்குகள் அரிதாகவே செயல்படுத்தப்படுகின்றன என்று மக்கள் கூறியுள்ளனர்.
இந்த சூழலில் மேற்கு பெய்ரூட்டின் ஹம்ரா பகுதியில் உள்ள ஃபெடரல் பேங்க் ஒஃப் லெபனான் கிளையில் வியாழக்கிழமை நண்பகலுக்கு சற்று முன்பு 42 வயதான பஸ்ஸாம் அல்-ஷேக் ஹுசைன்,துப்பாக்கியுடன் நுழைந்ததாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.
“அவர் தனது வங்கிக் கணக்கில் வைத்திருந்த சுமார் 200,000 டொலரை மீள பெற விரும்புவதாக கோரினார். ஆனால் வங்கி ஊழியர் கோரிக்கையை மறுத்து விட்டார். தனது தந்தை மருத்துவமனையில் இருப்பதாக அவர் சத்தமிட்டுள்ளார். ஆனால் வங்கி ஊழியர்கள் அதை கணக்கிலெடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஹுசைன் துப்பாக்கியை வெளியே எடுத்தார்” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
வங்கியிலிருந்தவர்கள அவர் பயணக்கைதிகளாக பிடிக்க முயன்றார்.
சில வங்கி வாடிக்கையாளர்கள் அவர் கதவுகளை மூடுவதற்குள் தப்பி ஓடிவிட்டனர்.
பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் ஒரு முதியவர் வங்கியில் இருந்து அவரது வயதின் காரணமாக விடுவிக்கப்பட்டார்.
தனது பணத்தை பெறுவதற்காக வங்கிக்குள் வாடிக்கையாளர் ஒருவர் 6 பேரை பயணக்கைதிகளை பிடித்து வைத்திருக்கும் தகவல் பரவியதும் பரபரப்பு ஏற்பட்டது. அவருடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு அரசாங்க பேச்சுவார்த்தையாளர்கள் அனுப்பப்பட்டனர், உள்துறை அமைச்சு கூறியது.
ஒரு வாடிக்கையாளர், 5 வங்கி ஊழியர்களே பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
லெபனான் ஊடக நிலையம் அல்-ஜதீத் குறைந்தது இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறியது. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை அனுப்பியுள்ளதாக லெபனான் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
வங்கிக்கு வெளியே மக்கள் கூட்டம் கூடி “வங்கிகளின் ஆட்சியை வீழ்த்து!” என்று கோஷமிட்டனர்.
6 மணித்தியாலங்களின் பின்னரே நிலைமை சுமுகமாகியது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அந்த நபர் தனது வங்கிக் கணக்கிலிருந்து 30,000 டொலர்கள் எடுக்க அனுமதிக்கப்பட்டார்.
பஸ்ஸாம் அல்-ஷேக் ஹுசைன் மீது ஏதேனும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை




