புல்லுமலையில் போராட்டம்!

Date:

‘இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ என்ற தொனிப் பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் நெறிப்படுத்துனர் கண்டுமணி லவகுசராசா தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் சுழற்சி முறையில் 100 நாட்கள் செயல் முனைவு போராட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் 13 நாள் செயல் முனைவான போராட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பெரிய புல்லுமலையில் இன்று(13) நடைபெற்றது.

இன்று காலை பெரிய புல்லுமலை பிரதான வீதியில் ஒன்று கூடிய மக்கள்  கோரிக்கை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘நடமாடுவது எங்கள் சுதந்திரம் ஒன்று கூடுவது எங்கள சுதந்திரம்’, ‘பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை’, ‘வேண்டும் வேண்டும் வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும்’ என்பன போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சிவில் அமைப்புக்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்