தமிழ் தேசிய கூட்டமைப்பின் காய்நகர்த்தலை பார்த்து முஸ்லிம் சமூகம் பாடம் படிக்க வேண்டுமென அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளில் ஜேவிபி மாத்திரமே ஜனாதிபதி தெரிவில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்கவில்லை. மிகுதி அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை தவிர மிகுதியானவர்கள், ரணிலுக்கு வாக்களித்ததாகவே அறிகிறேன்.
அண்மையில் ஒரு வீடியோவை பார்த்தேன். அதில் சுமந்திரன் எம்.பி, சாணக்கியன் எம்.பியை பார்த்து, அவருக்கு இன்னும் மஹிந்த ராஜபக்ச குடுபத்துடன் நெருக்கமாக உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெளியில் எவ்வளவுதான் எதிர்த்து பேசினாலும், உள்ளுக்கும் ஜனாதிபதிகளுடன் நெருக்கமாக இருப்பார்கள். இதை பார்த்து முஸ்லிம் சமூகமும், கட்சிகளும் பாடம் படிக்க வேண்டும்.
முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியை இரகசியமாக சந்திக்காமல் வெளிப்படையாக சந்திக்க வேண்டும். நாளை ரவூப் ஹக்கீமும், நிசாம் காரியப்பரும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக அறிகிறேன். எமக்கு என்ன அமைச்சு வேண்டுமென இரகசியமாக கேட்காமல், பகிரங்கமாக சென்று அதை கேளுங்கள் என்றார்.
முஸ்லிம் காங்கிரசின் கட்சி தீர்மானத்தை மீறி அமைச்சு பதவியேற்றவர் நசீர் அஹமட் என்பது குறிப்பிடத்தக்கது.