28.8 C
Jaffna
March 2, 2025
Pagetamil
விளையாட்டு

விமான டிக்கெட் இல்லாமல் காத்திருந்த இலங்கையணிக்கு விடிவு!

கொலம்பியாவில் நடைபெறும் 20 வயதிற்கு உட்பட்டவர்களிற்கான உலக தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த இலங்கை அணி, உரிய நேரத்தில் விமான டிக்கெட்டுகளை பெறாததால, நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போட்டியில் 7 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இலங்கை ஜூனியர் அணியும் அவர்களது பெற்றோர்களும் தமக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தின் அடையாளமாக டொரிங்டd் அரங்கில் நேற்று இரவு தங்கினர்..

அவர்களிற்கான விமான டிக்கெட்கள் வழங்கப்படவில்லை.

இதேவேளை, உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கனிஷ்ட தடகள அணியை கொலம்பியாவிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விடுத்துள்ள அறிக்கையில், இந்த நிலைமையை வீரர்கள் எதிர்கொள்ள நேர்ந்தமை குறித்து தாம் ஏமாற்றமடைவதாக தெரிவித்துள்ளார்.

“கொலம்பியாவுக்குச் செல்லும் விமானத்தைப் பிடிக்க இன்னும் போராடிக் கொண்டிருக்கும் 7 பிள்ளைகளைக் கொண்ட குழுவை நான் அறிவேன். இந்தக் பிள்ளைகளுக்கு விமானச் சீட்டுக்கான நிதியை வழங்குவதற்கு எனது அனுமதி இருந்த போதிலும், விளையாட்டுத்துறை சம்மேளனமோ அல்லது விளையாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரியோ தேவையான நடவடிக்கைகளை எடுக்காதது குறித்து நான் மிகுந்த ஏமாற்றமடைகிறேன்” என அமைச்சர் ரணசிங்க ட்வீட் செய்துள்ளார்.

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகிய இருவரும் ஒரு வாரத்திற்குள் பணம் செலுத்தப்படும் என உறுதியளித்ததை அடுத்து வீரர்களுக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!