கம்பஹா நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக நபரான சமன் ரோஹித பெரேரா என அழைக்கப்படும் ‘பஸ் பொட்ட’ உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
காரில் வந்த இனந்தெரியாத நபர்கள், நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த ‘பஸ் பொட்ட’ மற்றும் பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதாளஉலக குழு உறுப்பினரான ‘பஸ் பொட்ட’ ஆபத்தான நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1