யாழில் கொரோனா தொற்றினால் மூதாட்டி பலி!

Date:

வடமாகாணத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று (2) வடக்கை சேர்ந்த  470 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. அதில் 9 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 3 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்- நல்லூர் வீதியில்- உயிரிழந்த 84 வயதான மூதாட்டியெருவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியானது.

யாழ்ப்பாணத்தில் பதிவான 7வது கொரொனா மரணம் இதுவாகும்.

அதுதவிர,சாவகச்சேரி பொதுச்சந்தையில் நடத்தப்பட்ட எழுமாற்றான சோதனையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த ஒருவரும், யாழ் போதனா வைத்தியசாலையில் 3 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்