எரிவாயு வரிசையில் இ.தொ.கா உறுப்பினர் அட்டூழியம்!

Date:

நோர்வூட் பிரதேச சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் சூசை அலக்ஸாண்டர் எரிவாயு வரிசையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை எட்டி உதைத்து பந்தாடிவிட்டு, காத்திருந்த நபர் ஒருவரையும் எச்சரித்துள்ளார். அத்துடன் தனது இடுப்பில் மறைத்து வைத்தியிருந்த போத்தலை எடுத்து குத்துவதற்கு முயற்சித்ததுடன் தூசண வார்த்தைகளால் வசைபாடினார்.

பந்தாடிவிட்டு அச்சுறுத்தும் காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில், அவர் மீது விசாரணை நடைப்பெறும் எனவும், அதுவரையிலும் அவரை, கட்சியில் இருந்து இடைநிறுத்துவதாகவும் இ.தொ.காவின் பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

“நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் சூசை அலக்ஸாண்டர் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட ஒழுக்காற்று குழு, எதிர்வரும் 21ஆம் திகதி (வியாழக்கிழமை) உரிய விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதுபோன்ற செயல்களுக்கு இ.தொ.கா ஒருபொழுதும் அனுமதியளிக்காது என்பதோடு குறித்த பிரதேச சபை உறுப்பினரின் சகல கட்சி உறுப்புரிமைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை தெரிவித்துக்கொள்கிறேன் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்