நபர் ஒருவரிடமிருந்து மீட்கப்பட்ட 6800 லீட்டர் டீசல் அத்தியாவசிய சேவைகளிற்காக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சி நீதிமன்றினால் குறித்த எரிபொருள் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சி கரடிபோக்கு பகுதியில் கடந்த வாரம் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட டீசல், பெற்றோல் மற்றம் மண்ணெண்ணையே இவ்வாறு நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டு அத்தியாவசிய சேவைகளிற்காக பயன்படுத்த கையளிக்கப்பட்டது.
அதற்கு அமைவாக இன்றைய தினம் 12.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற பதிவாளரை சந்தித்து குறித்த எரிபொருட்களை பெற்றுக்கொண்டனர்.
குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிடுகையில்,
எமக்கு கிடைக்கப்பெற்ற எரிபொருளில் 6800 லீட்டர் டீசலாக காணப்படுகின்றது.
அதனை நீதிமன்றம் மாவட்ட செயலகத்திற்கு கையளித்துள்ளது. அதன் பிரகாரம் குறித்த எரிபொருளை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கையளித்து அவற்றை அத்தியாவசிய சேவைகளிற்காக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.