‘பெரிய அளவில் எந்த மாற்றமுமில்லை’: நடிகை சிம்ரன்

Date:

’20 ஆண்டுகளுக்குப்பிறகு உங்களுடன் இணைந்து நடித்தது அருமையாக இருந்தது. நீங்கள் சிறந்தவர்’ என நடிகை சிம்ரன் ட்விட்டரில் மாதவனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’. இந்தப் படத்தை இயக்கி நடித்திருக்கிறார் மாதவன். இதில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னதாக மாதவனுடன் நடிகை சிம்ரன் பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ராக்கெட்ரி படம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை சிம்ரன், “பார்த்தாலே பரவசம்’ படத்தின் சிமி கேரக்டர், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ இந்திரா கேரக்டரை அடுத்து ’ராக்கெட்ரி’ படத்தின் மிஸஸ் நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்ததுவரை உங்களிடம் பெரிய மாற்றம் ஏதுமில்லை. 20 வருடங்களுக்குப் பிறகு நீங்கள் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் உங்களுடன் நடித்தது அருமையாக இருந்தது. நீங்கள் சிறந்தவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...

பாதியிலேயே முடிந்த மருத்துவர் கனவு

ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும்...

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 41-வது வயதில் சர்வதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்