பருத்தித்துறை சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எரிபொருள் கோரி போராட்டம்!

Date:

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள்  இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

கிராம மட்ட உத்தியோகத்தர்களை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட போதிலும்  இதுவரை தமக்கு எரிபொருள்  வழங்கப்படவில்லை, எரிபொருளை பெற்றுத் தருமாறு கோரியும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எமக்கு ஏற்படும் அவமானங்களை கண்டித்தும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

யாழ்மாவட்டத்தில்  வேறு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் மூன்று தடவைகள் முன்னுரிமையாக வழங்கப்பட்டுள்ளது.  ஆனால் தமக்கு பெற்றோல் இன்னமும் ஒருதடவை கூட வழங்கப்படவில்லை, இதனால்  எம்மால் கடமைக்கு செல்ல இயலாத சூழல் உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எமது உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட அவமானங்களை கண்டித்தும்  மேலும்  தற்போதைய நிலையில் கடமைக்கு செல்ல எமக்கு பெற்றோல்  பெற்றுத்தரும் வரை பருத்தித்துறை பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் அனைவரும்  கடமைக்கு செல்லாது பேராட்டத்தில் பங்குகொள்ளவும்,  உலக வங்கி கொடுப்பனவில் இருந்து விலகவும் முடிவெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ‘சித்திரக் கண்காட்சி 2026’

மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில்  கோலாகலமாக இடம்பெற்ற...

யாழில் பிரபல பாடசாலைக்குள் வைத்து அதிபர், ஆசிரியர்களால் ‘கும்மி’ எடுக்கப்பட்ட மாணவன்!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர், ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட பாடசாலை மாணவன்...

போதைப்பொருளுடன் பெண் கைது!

புத்தளம் விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், பாலாவி பகுதியில் முக்கிய போதைப்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்