4வது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திலேியாவை வீழ்த்தி, ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இலங்கை. சொந்த நாட்டில் 30 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இலங்கை வென்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு, சொந்த மண்ணில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை வெல்வது இதுவே முதல்முறை. கடைசியாக 1992ல் அலுஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வென்றனர்.
முன்னதாக நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா களத்தடுப்பை தெரவு செய்தது.
இலங்கையின் தொடக்க விக்கெட்டுக்கள் விரைவாக வீழ்ந்தன. 34 ஓட்டங்களில் 3 விக்கெட்டை இழந்தது. எனினும், சரித் அசலங்க கன்னிச் சதமடித்தார். அசலங்க 110, தனஞ்ஜய டி சில்வா 60, வனிந்து ஹசரங்க 21 ஓட்டங்களை பெற்றனர்.
49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களை இலங்கை பெற்றது.
பந்துவீச்சில் பட் கம்மின்ஸ், மிட்சல் மார்ஸ், குஹ்னோமான் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்ளை பெற்றது.
டேவிட் வோர்னர் 99, பட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் சம்மிக்க கருணாரட்ண, தனஞ்ஜய டி சில்வா, ஜெப்ரி வன்ட்ர்சே தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இலங்கை சார்பில் 8 பேர் பந்து வீசினர் இதில் அசலங்க தவிர்ந்த 7 பேர் விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 43 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்கள் வீசி, 7 விக்கெட்டுக்களை கொய்தனர்.
ஆட்ட நாயகன் சரித் அசலங்க.