பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மையில்லை!

Date:

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறுதிப் பெரும்பான்மை யை பெறவில்லை.

சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் பிரான்ஸின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் ஆட்சியில் அவரது இரண்டாவது தவணைக்காக வகுக்கப்பட்ட திட்டங்களும் சீர்த்திருத்தங்களும் நிறைவேறாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மக்ரோனுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளன.

நாடாளுமன்றத்தின் 577 இடங்களில் மக்ரோனின் மத்திய-வலசாரிக் கட்சியினருக்கு 234 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

அறுதிப் பெரும்பான்மையை அமைப்பதற்கு 289 இடங்கள் தேவைப்பட்டன.

புதிதாய் அமைக்கப்பட்ட இடசாரி NUPES கட்சிக்கு 141 இடங்களும் வலசாரி தேசியப் பேரணிக் கட்சிக்கு 90 இடங்களும் கிடைத்தன.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கவில்லை என்று பிரான்ஸின் நிதியமைச்சர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...

கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்