25 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

மாவை- ஜனநாயகப் போராளிகள் சந்திப்பு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு அம்பாறை ஊடகப் பேச்சாளர் சாந்தன் உட்பட கட்சியின் மட்டக்களப்பு நிருவாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் தேர்தலை முகங்கொடுத்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுதல், ஐநா வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்தான தீர்மானம், முன்னாள் போராளிகளின் அரசியற் செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“இந்தியாவிடம் முட்டை வாங்கி சீனாவுக்கு கோழி விற்பது நகைப்புக்குறியது” – சசிகுமார்

east tamil

தனியார் பேருந்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

Pagetamil

கிளிநொச்சி பேரூந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மலக் கழிவை உடனடியாக தடுக்க தவறின் சட்ட நடவடிக்கை – கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி

Pagetamil

அரசியல் தீர்வைப் பற்றிப் பற்றிய கதை (விடல்)கள்

Pagetamil

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஊழல் குற்றச்சாட்டுகள் – மீனவர்கள் எதிர்ப்பு

east tamil

Leave a Comment