டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகள் நாளை (6) முதல் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, நாளை முதல் பஸ் சேவைகள் மூன்றில் ஒரு பங்கிற்கு மட்டுப்படுத்தப்பட்டு, 5,000 பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மன்னார், வவுனியா, கம்பஹா, கேகாலை, பொலன்னறுவை, மாவனல்ல, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்து டீசல் கிடைக்கவில்லை என விஜேரத்ன தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் எரிசக்தி அமைச்சரும் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் தவறிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நாளை இரண்டாம் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு பஸ்கள் மட்டுப்படுத்தப்பட்டதன் தாக்கத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.