மாற்றான் மனைவியில் ஆசையால் விபரீதம்; வீதியோரம் சடலம்: இரத்தம் வடியும் கத்தியுடன் சரணடைந்த தம்பதி!

Date:

சிகிரியா புதிய நகரப்பகுதியில் பிரதான வீதியோரம் ஒரு நபரின் சடலம்  பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (30) சடலம் மீட்கப்பட்டது.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், கூர்மையான ஆயுதத்தால் அவரது கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக ஒரு விமானப்படை சிப்பாயும் அவரது மனைவியும் இன்று காலை கூர்மையான ஆயுதத்துடன் சிகிரியா பொலிசில் சரணடைந்துள்ளனர்.

இறந்தவர் மெல்சிரிபுர, அலுத்கமவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிசாரிடம் சரணடைந்த சிகிரியா விமானப்படை தளத்தின் ஊழியர் மற்றும் அவரது மனைவி சிகிரியா புதிய நகரத்தினருகில் அருகே ஒரு வாடகை வீட்டில் வசித்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

மெல்சிரிபுர பகுதியிலேயே விமானப்படை ஊழியரின் குடும்பம் வசித்து வந்தது. எனினும், அவரது மனைவியுடன், உயிரிழந்தவர் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததால், 15 நாட்களின் முன்னரே, புதிய நகரத்தில் வீடொன்றை வாடகைக்கு பெற்று, விமானப்படை ஊழியரின் குடும்பம் அங்கு குடிவந்துள்ளது.

அவரது தொல்லை தாங்க முடியாமல் கொலையை செய்ததாக சரணடைந்த இருவரும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரும், விமானப்படை ஊழியரின் மனைவியும் சில காலத்தின் முன்னர் வீட்டை விட்டு ஓடிச் சென்றுள்ளனர். பின்னர் பொலிசாரின் தலையீட்டினால் அவர்கள் கண்டறியப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது. இதை ஏற்று, மீண்டும் தனது கணவனுடன் அந்த பெண் வசித்து வந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது குடும்பத்தை பிரிந்து தனித்து வாழ்ந்து வந்துள்ளார்.

விமானப்படை ஊழியரின் மனைவி, தொடர்பை அறுத்த பின்னரும் அந்த நபர் தொல்லை கொடுத்து வந்தது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த கொலை அந்த பெண்ணால் செய்யப்பட்டதா அல்லது விமானப்படை ஊழியரால் செய்யப்பட்டதா அல்லது இருவரும் சேர்ந்து செய்ததா என்பது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் வெளியான சுரேஸ் சல்லேவின் மருத்துவ அறிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காகக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு; 15 பேர் குற்றவாளிகள்: 9 பேர் விடுவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாகக்...

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்